Friday, 25 September 2015

சன்னலோர இருக்கை

ஒடும் பேருந்தில்
சன்னலோர இருக்கைக்கு
அடம் பிடிக்கும் நான்
இப்போதெல்லாம்  தாராளமாய்
விட்டுத்தருகிறேன்
மகளுக்கு....
வரிசையாய் ஓடும்

Friday, 18 September 2015

பூங்கொத்து

எங்கள் தலைகளைக் கொய்து
நேர்த்தியாய் அடுக்கி
பிரியமானவர்களுக்கு
பரிசளிக்கிறீர்களே 

Thursday, 17 September 2015

அடம்

அடம் பிடிக்கும் குழந்தையாய்
விடாமல் பெய்கிறது மழை..
 நான்
 நனைந்தே ஆகவேண்டுமாம்.

Monday, 14 September 2015

மீண்டும் மழை

மழையில் நனையும்  ஆசை
மறுக்கப்பட்ட குழந்தை
ரகசியம் பேசுகிறது
மரத்திடம்...