Saturday, 7 November 2015

அறைந்து வருடுகிறாய்..

சன்னலைத் திறக்கிறேன்..
காத்திருக்க வைத்ததற்காய்
என்
முகத்தில் அறைந்துவிட்டு

வரைகிறேன் உன்னை....

மெல்லிய கோடுகளால்
மென்மையாக
வரைந்து கொண்டிருக்கிறேன்
உன் உருவத்தை..

Friday, 6 November 2015

துளி ரத்தம்

ஊசி குத்தியதால்
துளிர்த்த
ஒருதுளி ரத்தத்தை
உறைந்து போகும்முன்
உன்னிடம் காட்ட ஓடி வந்தால்..
அகல விரிக்கப்பட்ட உன்
உள்ளங்கைகளில் அறைந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்
ஆணிகளை.....
நடுங்கும் கரங்களால்
பிடுங்குகிறேன் ஆணிகளை...
கசியும் ரத்தத்தை